சதத்தை தவறவிட்ட குசால் மெண்டிஸ்! : பலமான நிலையில் இலங்கை!!!

0
291
West Indies vs Sri Lanka 2nd Test Day 4

மே.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கட்டுகளை இழந்து 334 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

மூன்றாவது நாள் முடிவின் போது 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டினை இழந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தை இலங்கை அணி தொடர்ந்தது.

நேற்றைய ஆரம்பம் இலங்கை அணிக்கு மிக மோசமாக அமைந்திருந்தது. 34 ஓட்டங்களுடன் ஆரம்பித்த இலங்கை அணி 48 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்து தடுமாறியது.

நைட்வொச்மேனாக களமிறங்கிய ராஜித ஓட்டங்களின்றியும், தனஞ்சய டி சில்வா 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்த நிலையில், அறிமுக போட்டியில் விளையாடிய மஹேல உடவத்த 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த சந்திமால் மற்றும் குசால் மெண்டிஸ் ஆகிய இருவரும், சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றனர்.

குறித்த இருவரும் 117 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற நிலையில், சந்திமால் 39 ஓட்டங்களுடன் கீமா ரோச்சின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

எனினும் அரைச்சதத்தை தாண்டி துடுப்பெடுத்தாடிய குசால் மெண்டிஸ் சதத்தை நெருங்கும் போது, 87 ஓட்டங்களுடன் கேப்ரியலின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ரொஷேன் சில்வா 48 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, வேகமாக துடுப்பெடுத்தாடிய டிக்வெல்ல 62 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

தற்போது களத்தில் நிற்கும் தனஞ்சய டி சில்வா 16 ஓட்டங்களையும், சுராங்க லக்மால் 7 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

இதன்படி நேற்றைய ஆட்டநேர முடிவில் 8 விக்கட்டுகளை இழந்து 334 ஓட்டங்களை பெற்றுள்ள இலங்கை அணி, மே.தீவுகளை விட 287 ஓட்டங்களை அதிகமாக பெற்றுள்ளது.

மே.தீவுகள் அணிசார்பில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கட்டுகளை வீழ்த்திய கேப்ரியல், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், கீமா ரோச் 2 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த போட்டி சமனிலையில் முடிவுபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்ற போதும், மே.தீவுகள் அணி வேகமாக ஓட்டங்களை குவிக்க முற்பட்டால் சிலவேளை மே.தீவுகள் அணி வெற்றிபெற வாய்ப்புள்ளது.

எனினும் மே.தீவுகள் அணி வேகமாக ஓட்டங்களை பெற முயலும் போது, இலங்கை அணி சீரான இடைவெளிகளில் விக்கட்டுகளை வீழ்த்துமானால் இலங்கை அணிக்கும் வெற்றிவாய்ப்பு அதிகமாக இருக்கும்.

<<Tamil News Group websites>>

West Indies vs Sri Lanka 2nd Test Day 4, West Indies vs Sri Lanka 2nd Test Day 4