இவர் தான் என் ஹீரோ: காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா!

0
61

ராஜா ராணி சீசன் 2 தொடருக்குப் பின்னர் பிக்பொஸ்ஸில் போட்டியாளராகக் கலந்துகொண்டார் அர்ச்சனா. அதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்நுழைந்து போட்டியில் மாபெரும் திருப்புமுனையை நிகழ்த்தியவராக இருந்தார்.

இந்நிலையில் சமீப காலமாகவே அர்ச்சனாவும் பாரதி கண்ணம்மா தொடரின் கதாநாயகன் அருண் பிரசாத்துக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

இந்த விடயம் உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் படியாக இருவரும் சேர்ந்து பிறந்தநாளைக் கொண்டாடும் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகின.

தற்போது அர்ச்சனாவின் ஒரு பதிவு, அவர்களின் காதலை உறுதி செய்துள்ளது. அருண் பிரசாத் ஒரு போட்டோஷூட் எடுத்திருக்கிறார். அந்த போட்டோ ஷூட் எடுக்கும்போது அர்ச்சனாவும் உடனிருந்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் குறித்த போட்டோஷூட் வீடியோவின் கமெண்ட்டில் ‘Thanks for shooting my hero’ என அர்ச்சனா கமெண்ட் செய்துள்ளார். அருணை ஹீரோ என பதிவிட்டதனால், இவர்கள் காதல் உறுதியானது என தகவல் பரவி வருகிறது.