அடுத்தடுத்து களமிறக்கப்பட்ட மூன்று இலங்கை போட்டியாளர்கள்

0
103

காத்திருப்பு பட்டியலில் (waiting list) இருந்த ஈழத்து வம்சாவளி பெண் சாரங்கா “சரிகமப” இசைநிகழ்ச்சியில் 24வது போட்டியாளராக உள்வாங்கப்பட்டுள்ளார். இது ஒட்டு மொத்த இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இருந்து கலந்து கொண்ட சாரங்கா ”தித்திக்குதே…” பாடலை பாடி நடுவர்களிடம் இருந்து பாராட்டுக்களை பெற்ற போதும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இறுதி தேர்வு இடம்பெற்றது. இந்நிலையில், 25 போர் சரிகமப நிகழ்ச்சியின் போட்டியாளராக தெரிவாகியுள்ளதுடன், 24வது போட்டியாளராக சாரங்கா உள்வாங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கையில் இருந்து சென்ற பதுளை இந்திரஜித் மற்றும் வத்தளையைச் சேர்ந்த விஜய் லோசன் ஆகியோர் சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக தெரிவாகியிருந்தனர்.

அந்த வரிசையில் ஈழத்து வம்சாவளி பெண்ணான சாரங்காவும் போட்டியில் இணைந்திருப்பது நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.