குக் வித் கோமாளி போட்டியாளரை ‘தன் காதலி’ என கூறிய TTF வாசன்: அட இது தெரியாமப் போச்சே!

0
67

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களின் கிங் என்றால் அது குக் வித் கோமாளிதான். நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஐந்தாவது சீசன் கடந்த வாரத்தில் ஆரம்பமாகியது.

இந்நிலையில் இந்த சீசனில் திவ்யா துரைசாமி, ஸ்ரீகாந்த் தேவா, இர்பான், விடிவி கணேஷ், கேரளாவைச் சேர்ந்த நடிகை ஷாலின் சோயா ஆகியோர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர்.

ஷாலின் சோயாவின் வெகுளியான பேச்சும், துறுதுறு என இருக்கும் இயல்பும் அனைவரையும் கவர்ந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

தற்போது இவர் அனைவர் முன்னிலையிலும் பேசுபொருளாகியுள்ளார். அதற்கு காரணம் என்னவென்றால் இவர் பிரபல யூடியூப்பர் TTF வாசனின் காதலி என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆம் அண்மையில் தனது யூடியூப் சேனலில் பேசிய வாசன் ஷாலினியை தனது காதலி என்று குறிப்பிட்டுள்ளார்.