கனடாவில் கொரோனா தொற்றினால் 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

0
459

கனடாவில் கொரோனா தொற்றினால், 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, கனடாவில் 19ஆயிரத்து 94பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் இதுவரை தொற்றினால் ஏழு இலட்சத்து 47ஆயிரத்து 383பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 852பேர் பாதிக்கப்பட்டதோடு 120பேர் உயிரிழந்துள்ளனர். 63ஆயிரத்து 668பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 849பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர்.

ஆறு இலட்சத்து 64ஆயிரத்து 621பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.