இத்தனை விலையா ப்ரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த மோதிரம்

0
206
Priyanka Chopra ring Manish Malhotra birthday tamil news

சமீப காலமாக தலைப்பு செய்திகளாக வரத் தவறாத ப்ரியங்கா சோப்ரா, அண்மையில் சிங்கப்பூரில் பாடகரும் காதலருமான நிக் ஜோனஸின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் இந்தியா திரும்புகையில் மீண்டும் நிச்சயதார்த்த மோதிரத்துடன் கவனிக்கப்பட்டார்! Priyanka Chopra ring Manish Malhotra birthday tamil news

டெல்லி விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது, பிரியங்கா தனது இடது கையில் இருந்த மோதிரத்தை அகற்றி, தனது பாக்கெட் உள்ளே தள்ளினார்.

இதற்கு முன்பு  ஒருமுறையும் கூட, அவர் விமான நிலையத்திற்கு வந்தபோது, தனது வலது கையில் அணிந்திருந்த மோதிரத்தை ஊடகவியலாளர்களிடமிருந்து மறைத்து வைத்தார்!

ஜூலை 18 ம் திகதி, பிரியங்காவின் பிறந்த நாளன்று லண்டனில் பாடகர் தனது காதலிக்கு மோதிரம் அணிந்துள்ளதாக நம்பப்படுகிறது. இது ஒரு ரகசிய நிச்சயதார்த்தம்.

இப்படி மறைத்து மறைத்து பாதுகாத்த அந்த நிச்சயதார்த்த மோதிரத்தை, தன்னை அறியாமல் அம்பலப்படுத்திவிட்டார்.

அதைவிட பெரிய அதிர்ச்சி அந்த மோதிரத்தின் விலை.

இணையத்தில் ரசிகர் ஒருவர் ப்ரியங்கா சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவிக்க அவரும் நன்றி என்று பதில் அளித்தார். அதை வைத்து தான் ப்ரியங்காவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உறுதி ஆனது.

பிரபல ஃபேஷன் டிசைனர் மனிஷ் மல்ஹோத்ராவின் பிறந்தநாள் விழாவில் ப்ரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அப்போது அவரும், நடிகை ரவீனா டான்டனும் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். அந்த புகைப்படத்தில் தான் ப்ரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த மோதிரம் தெளிவாக தெரிந்தது.

ப்ரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த மோதிரத்தில் இருப்பது 4 காரட் எடை கொண்ட வைரமாம். அதன் மதிப்பு ரூ. 1.4 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரியங்கா ஒரு ஜோடி செருப்பையே ரூ. 1.25 லட்சத்திற்கு வாங்கும் போது அவரின் நிச்சயதார்த்த மோதிரம் விலை நிச்சயமாகவே உயர்ந்ததாகத் தானே இருக்கும்.

Tags: Priyanka Chopra ring Manish Malhotra birthday tamil news

எமது ஏனைய தளங்கள்