கொமன்வெல்த் செயலாளர் நாயகம் இலங்கை விஜயம்!

0
450

பற்றீசியா ஸ்கொட்லன் கொமன்வெல்த் அமைப்பின் செயலராக கடந்த 2016 ஏப்ரல் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இலங்கைக்கான நான்கு நாட்கள் அதிகாரபூர்வ விஜயம் ஒன்றை முன்னெடுக்குறார். Commonwealth Secretary General Scotland Visits Sri Lanka Tamil News

இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின் படி,

நாளை கொழும்பு வரும், இவர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

எதிர்வரும், 2ஆம், 3ஆம் நாள்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, பைசர் முஸ்தபா, அகில விராஜ் காரியவசம், ரஞ்சித் மத்தும பண்டார, சாகல ரத்நாயக்க உள்ளிட்டோரை கொமன்வெல்த் செயலாளர் நாயகம் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

2018 கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டில் இணங்கிக் கொள்ளப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் பரந்துபட்ட ஒத்துழைப்பு ஆகிய விடயங்களை மைய்யப்படுத்தியே இவர் பேச்சுக்களை நடத்துவார் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites