தமிழ் இளைஞர்கள் 11 பேரின் சடலங்களை அகற்றிய புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை!

0
470

கடந்த 2007ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில், நீண்டநாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரிகள் இருவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். Two Navy Intelligence Officers Bail Involve Tamil People Kidnap

கடற்படைப் புலனாய்வு அதிகாரிகளாக இருந்த, கஸ்தூரிகே காமினி, துசார மென்டிஸ் ஆகிய இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்தினம் நேற்று பிணையில் செல்ல அனுமதித்தார்.

இவர்கள் இருவரும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் சடலங்களையும் திருகோணமலையில் இருந்த தடுப்பு முகாமில் இருந்து வெளியே கொண்டு செல்வதற்கு, ஏனைய சந்தேக நபர்களுக்கு உதவினார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும் பிணையில் விடுவிக்கப்பட்ட இருவரினதும் கடவுச்சீட்டை முடக்கி வைக்குமாறும் வெளிநாடு செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites