விஜயகலாவை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு அகிலவிராஜின் எச்சரிக்கை!

0
139
tamilnews general opposite akilawiraj warning wijayakala issue

(tamilnews general opposite akilawiraj warning wijayakala issue)

நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் நாடாளுமன்றத்துக்கு வெடிகுண்டு வீசி தாக்குவதாக கருத்து வெளியிட்டவர்கள் இன்று நாடாளுமன்றத்தினதும், நாட்டின் பாரம்பரிய கோட்பாடுகள் தொடர்பாகவும் கருத்து வெளியிடுவது வேடிக்கையான விடயம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜகலா மகேஸ்வரன், தேசிய பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் கோட்பாடுகளை மீறினார் என்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி கூட்டு எதிர்கட்சியினர் அரசியல் இலாபம் தேடி வருகின்றனர்.

அத்துடன் கடந்த காலங்களில் நாட்டின் முக்கிய தீர்மானிக்கும் ஸ்தானமான நாடாளுமன்றத்தின் செங்கோலை கைப்பற்றி உடைக்க முற்பட்டவர்களும் சபாநாயகரை அவமதித்து பேசியவர்களும் மக்கள் பிரதிநிதிகள் திரண்டு நிற்கின்ற நாடாளுமன்றத்தை பகிரங்கமாக குண்டு வீசி தகர்ப்பேன் என்று குறிப்பிட்டவர்களும் இவர்கள் தான்.

ஆனால் இவர்கள் தாம் கடந்து வந்த பாதையை மறந்து இன்னொருவரின் விடயத்தை பகடைக்காயாக்கி தேசிய பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் கோட்பாடுகள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து அரசியல் இலாபம் ஈட்ட முயல்கின்றனர் என்று அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சாடியுள்ளார்.

(tamilnews general opposite akilawiraj warning wijayakala issue)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites