எஸ்.கே.கிருஷ்ணாவின் கொலைக்கு சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகமே காரணம்? ருவான் குணசேகர

0
312
tamilnews sea street shooting krishna major drugs suspect ruwan

(tamilnews sea street shooting krishna major drugs suspect ruwan)

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ணபிள்ளை கிருபானந்தனின் மரணம் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த 24 மணிநேரத்துக்குள் ஒரே பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அவற்றில் ஒன்று புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டியார் தெருவில் பழக்கடை ஒன்றுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான 40 வயதுடைய எஸ்.கே.கிருஷ்ண என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இவர் மீது கஞ்சா போதைப் பொருள் வியாபாரம் தொடர்பில் இரண்டு வழக்குகள் காணப்படுகின்றன.

இதில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட இவர் தற்போது பிணையிலிருந்த நேரத்திலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

இவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் போதைப்பொருள் வியாபாரத்தை மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

எவ்வாறாயினும் மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரின் வழிக்காட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாராலும், புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழான குழுவொன்றும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

(tamilnews sea street shooting krishna major drugs suspect ruwan)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites