அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து – சுவீடன் 2-0 என தோல்வியை தழுவியது

0
408
football fifa world cup 2018 sweden vs england match

(football fifa world cup 2018 sweden vs england match)

உலகக்கிண்ண கால்பந்து காலிறுதியில் சுவீடனை 2-0 என வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

உலகக்கிண்ண கால்பந்து திருவிழா ரஷியாவில் இடம்பெற்று வருகிறது.

இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிய 3 வது காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

போட்டி தொடங்கிய நேரத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் ஆர்வம் இல்லாமல் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் இங்கிலாந்திற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அஷ்லே யங் பந்தை உதைக்க மேகுய்ர் தலையால் முட்டி கோல் அடித்தார்.

இதனால் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் முதல் பாதி நேரத்தில் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றது.

2 வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் சுவீடன் வீரர்கள் அட்டக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் இங்கிலாந்து கோல்கீப்பர் அதை திறமையாக தடுத்தார்.

அதேவேளையில் இங்கிலாந்து வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் விளையாடினார்கள். ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் வலது கார்னர் பக்கத்தில் இருந்து அடித்த பந்தை லிங்கார்டு தலையால் முட்டி கோல் அடிக்கும் வகையில் தூக்கி அடித்தார்.

அதை டேல் அலி தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் இங்கிலாந்து 2-0 என முன்னிலைப் பெற்றது.

இரண்டு கோல் அடித்தாலும் இங்கிலாந்து டிபென்ஸ் ஆட விரும்பவில்லை. தொடர்ந்த அட்டக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டனர். 77-வது நிமிடத்தில் டேல் அலி மாற்றப்பட்டார்.

90 வது நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

காயம் மற்றும் ஆட்டம் நிறுத்தத்தை கணக்கிட்டு கூடுதலா 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. இந்த நேரத்திலும் கோல் அடிக்காததால் இங்கிலாந்து 2-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

தகவல் மூலம் – தமிழ்மைகேல்

(football fifa world cup 2018 sweden vs england match)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites