ஹிட்லரை காட்டி பயமுறுத்தியே குழந்தைகளுக்கு உணவு ஊட்டவேண்டியுள்ளது – சந்திராணி பண்டார

0
149
Ranil Maithree not able accommodate Hitlers regime unless government

(Ranil Maithree not able accommodate Hitlers regime unless government)

நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இருக்கும் வரை, ஹிட்லர் ஒருவரின் ஆட்சிக்கு இடமளிக்க முடியாது என அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல கேள்விக்கான நேரத்தின் போது, அசோக்க பிரியந்த எம்.பி எழுப்பிய குறுக்குக் கேள்விக்குப் பதிலளிக்கும் போ​தே, அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், தற்போது “ஹிட்லர் வரப்போகிறார் என்று பயமுறுத்தியே, குழந்தைகளுக்குத் தாய்மார், உணவு ஊட்டுகின்றனர்”

“முன்பெல்லாம் பேய், பூதங்கள் வருவதாகப் பயமுறுத்தியே, குழந்தைகளுக்கு உணவு ஊட்டி வந்தனர்.

ஆனால், சில வாரங்களாக ஹிட்லர் ஆட்சிக்கு வரபோகிறார் என்று பயமுறுத்தியே, குழந்தைகளுக்கு உணவு ஊட்டப்படுகின்றது.

“சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க, சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்காக, விசேட நீதிமன்றக் கட்டமைப்பை, நீதியமைச்சரிடம் நாம் கோரியுள்ளோம்.

அவ்வாறான நீதிமன்றத்தில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகள், வாரத்தில் ஒரு நாளில் மாத்திரமாவது விசாரணை செய்யப்பட வேண்டும்” என்று அமைச்சர் சந்திராணி பண்டார குறிப்பிட்டார்.

(Ranil Maithree not able accommodate Hitlers regime unless government)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites