வணிக வளாகத்தில் திடீரென உயிரிழந்த 5 வயது சிறுவன்!

0
795
5 year old boy died byy lift

Val-d’Oise இலுள்ள வணிக வளாகம் ஒன்றில் உள்ள மின் தூக்கியால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான். 5 year old boy died byy lift

நேற்று மாலை 7 மணி அளவில், Argenteuil நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் தெரிவித்த முதற்கட்ட தகவல்களின் படி, குறித்த சிறுவன் தரை தளத்தில் இருந்து முதலாவது மாடியிற்கு மின்தூக்கியில் சென்று கொண்டிருக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தைத் தொடர்ந்து, வணிக வளாகத்தில் நின்றிருந்த கிட்டதட்ட 1000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

மேலும், அங்கு அவசரகால மனநல முகாமும் அமைக்கப்பட்டு பலருக்கு சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**