கியூபெக்கில் எலி, பூனை விளையாட்டு!

0
606
G7 Protest Quebec

கியூபெக் நகர வீதிகளில் G7 மாநாட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் விரட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. G7 Protest Quebec

அங்கு பொலிஸாரை களைப்படையச் செய்யும் நடவடிக்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆங்காங்கே போக்குவரத்தை தடைசெய்தனர்.

எலியும், பூனையும் போல் பொலிஸாருக்கு விளையாட்டுக்காட்டிய ஆர்ப்பாட்டக்கார்கள் முன்னதாக அமைதியான முறையிலேயே தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். முன்னதாக G7 மாநாட்டிற்காக கியூபெக்கின் சார்லவொய்க்கில் பொலிஸார் பாதுகாப்பினைப் பலப்படுத்தியிருந்தனர்.

ஏழு நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ளும் G7 பேச்சுவார்த்தை இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளதையடுத்து வெளியிலிருந்து இடையூறுகள் எதுவும் ஏற்படாமலிருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பேச்சுவார்த்தையின்போது எந்தநாட்டுத் தலைவர்களையும் வெளியாட்கள் நெருங்க முடியாதவகையில் 10000 பொலிஸார் மற்றும் இராணுவப்படையினர் பேச்சுவார்த்தை நடைபெறும் இடமான Manoir Richelieu உல்லாச ஓய்வுவிடுதியினைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர்.