நயன்தாராவின் படத்திற்கு கிடைத்த பெருமை : ரூ.150 கோடிக்கு விற்பனை..!

0
512
Nayanthara new movie worth Rs150crore,Nayanthara new movie worth Rs150crore

(Nayanthara new movie worth Rs150crore)

நயன்தாராவின் நடிப்பில் வெளியாகிய சமீபத்திய படங்கள் நல்ல வசூல் பார்த்து வருகின்றன. அந்தவகையில், அவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிரோடு மீட்க போராடும் கலெக்டராக நடித்து இருந்த ”அறம்” படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

பிறமொழிகளிலும் இந்த படத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேடிப் பிடித்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், கதாநாயகன் இல்லாமல் நயன்தாராவை மட்டும் வைத்து தயாராகி வரும் ”கோலமாவு கோகிலா” படத்தின் ஒரு பாடல் காட்சியை வெளியிட்டனர்.

அதில், நயன்தாராவை நகைச்சுவை நடிகர் யோகிபாபு காதலிப்பது போன்ற பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகிறது. தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி சரித்திர படமும் ரிலீசுக்கு தயாராகிறது.

இதில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

இப் படத்தின் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெளியிடும் உரிமை ரூ.150 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளையும் பெரிய தொகைக்கு விற்றுள்ளனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

சாமி ஸ்கொயர் படத்தில் மிரட்டும் தேவி ஸ்ரீ பிரசாத் : பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..!

அடல்ட் படத்தில் நடிப்பீர்களா..? : ஆர்யாவின் பகீர் பதில்..!

தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!

11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : ஆதங்கத்தை வெளிக்காட்டிய விஜய்சேதுபதி..!

விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

“பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!

அமீரின் கனவுப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சி..!

டெட்பூல் 2 : திரை விமர்சனம்..!

Tags :-Nayanthara new movie worth Rs150crore

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 24-05-2018