ரொரண்டோ தாக்குதல் ஒரு மாத பூர்த்தி

0
178
Canada Tamil News, Canada News

Toronto Attack Rememberance

ரொரண்டோவில் வேன் தாக்குதல் இடம்பெற்ற ஒரு மாத பூர்த்தி நினைவு கூறப்பட்டது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி வேனொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

அந்த சம்பவத்தின் நினைவாக இரண்டு நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நினைவையொட்டி மக்கள் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேற்படி தாக்குதலில் காயமடைந்த பலர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

25 வயதான நபரொருவரே குறித்த தாக்குதலை நடத்தியிருந்தார். அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

இத்தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி தாக்குதலில் உயிரிழந்த ஏனையோர்;

  • Beutis Renuka Amarasingha, 45
  • Andrea Bradden, 33
  • Geraldine Brady, 83
  • So He Chung, 22
  • Anne Marie D’Amico, 30
  • Mary Elizabeth Forsyth, 94
  • Ji Hun Kim, 22
  • Dorothy Sewell, 80
  • Chul ‘Eddie’ Min Kang, 45
  • Munir Abdo Habib Najjar, 85