5000 பேருக்கு பிரதமரிடம் பதவி நியமனங்கள்

0
481
new appointment five thousand youngster prime minister rani

new appointment five thousand youngster prime minister rani
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் மேலும் ஐயாயிரம் பேர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற வரையறுக்கப்பட்ட மற்றும் போட்டி பரீட்சையின் ஆகக் கூடிய புள்ளிகளை பெற்ற பரீட்சார்த்திகள் நேர்முக பரீட்சையின் மூலம் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி கே.வி.பி.எம்.ஜி.கமகே தெரிவித்தார்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் எதிர்வரும் திங்கட்கழமை காலை வழங்கப்படவுள்ளது.

சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவோர் மாவட்ட மட்டத்தில் இரண்டு வார பயிற்சி வழங்கப்படும் எனவும், இதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று திருமதி கமகே தெரிவித்தார்.

இவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவதன் மூலம் கடந்த வருடத்தில் ஜனவரி 30ம் திகதி அளவில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் நிலவிய அனைத்து வெற்றிடங்களும் முழுமைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
new appointment five thousand youngster prime minister rani

More Tamil News

Tamil News Group websites :