மின்சாரக்கதிரை மற்றும் சர்வதேச விசாரணை என்பன போலி பிரசாரங்கள்

0
522
president electrical chair international inquire political profit

president electrical chair international inquire political profit
இராணுவத்தினரை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இராணுவ நினைவு தூபியை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நாட்டுக்காகவும் மற்றும் நாட்டு மக்களுக்காகவும் உயிர் தியாகம் செய்த இராணுவத்தினருக்கு எந்தவித பாதிப்புக்களையும் ஏற்படுத்த இடமளிக்க போவதில்லை.

அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய உயரிய கௌரவத்தினை அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ளது.

சர்வதேச விசாரணை மற்றும் மின்சாரக்கதிரை போன்ற சொற்பிரயோகங்கள் அரசில் இலாபத்திற்காக பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி,

ஒரு போதும் இராணுவத்தினரை அவ்வாறான ஒரு கட்டத்திற்கு அழைத்துச்செல்ல போவதில்லை என குறிப்பிட்டார்.
president electrical chair international inquire political profit

More Tamil News

Tamil News Group websites :