பிரான்ஸில் வாகனம் திருத்துபவர்களுக்கு புது சட்டம்!

0
626
Court rules car work costs agreed beforehand

காரின் எவ்வித திருத்த வேலைகளுக்குமான செலவு வாடிக்கையாளரிடம் காரை கையளிக்கும் முன் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மேலதிக கட்டணங்கள் எதுவும் செலுத்த அனுமதிக்கப்படாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.Court rules car work costs agreed beforehand

காரிலிருந்து எண்ணெய் கசிவை சரி செய்வதற்காக ஒருவர் காரை garage இல் விட்டிருந்தார். இது தொடர்பான வழக்கிற்கு தீர்ப்பளிக்கும் போதே உச்ச நீதிமன்றம் அவ்வாறு தெரிவித்தது.

மேலும் குறித்த அந்த நபர் வேறு எந்த திருத்த வேலையும் கோரவுமில்லை அத்துடன் ஒப்புக்கொள்ளவுமில்லை.

மெக்கானிக் வாகனத்தை தனது கேரேஜிற்கு எடுத்துச் சென்று எண்ணெய் கசிவு சிக்கலை சரிசெய்யத் தொடங்கியபோது, ​​எஞ்சின் மற்றும் உடற்பகுதியில் பல திருத்த வேலைகள் இருந்தன என்று கண்டுபிடித்ததுடன், அனைத்து திருத்த வேலைகளையும், மேற்கொண்டார். அதற்கான மொத்த செலவு 3,200 யூரோவிற்கு வந்துவிட்டது.

ஆனால் அந்த வாகனத்தின் உரிமையாளர் மெக்கானிக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டார், எந்த கூடுதல் வேலைக்கும் அவர் கட்டளையிடவில்லை என தெரிவித்ததுடன், அவர் எண்ணெய் கசிவை சரிசெய்யும் செலவை மட்டும் ஒப்புக் கொண்டார்.

இதன் பின்னர் தொடரப்பட்ட வழக்கிற்கு உள்ளூர் நீதிமன்றம் “ஒரு தொழில்முறை மெக்கானிக், காரினை திருத்த ஒப்புக் கொண்டால் முழுவதும் திருத்துவார். ஆகவே அதற்கான செலவை உரிமையாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என தீர்ப்பளித்தது.

ஆனால் அந்த தீர்ப்பிற்கு பரிஸ் உச்ச நீதிமன்றம் (la cour de cassation) உடன்படவில்லை.அத்துடன் அது தீர்ப்பை தள்ளுபடி செய்தது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**