நடாலின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தீம்

0
542
Madrid Open Rafael Nadal Loss news Tamil

(Madrid Open Rafael Nadal Loss news Tamil)

மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதியில் ஸ்பெயினின் முதற்தர வீரர் ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார்.

மெட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினின் தலைநகரான மெட்ரிட்டில் நடைபெற்று வருகின்றது.

இதில் களிமண் ஆடுகளத்தில் தொடர்ச்சியாக 50 செட்கள் வெற்றிபெற்று 34 வருட சாதனையை படைத்திருந்த நடாலை 2-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி டொமினிக் தீம் வெற்றிபெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரரை எதிர்கொண்ட தீம், எவ்வித தயக்கமும் இல்லாமல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதல் செட்டில் 7-5 என நடாலை அடிபணிய செய்த தீம், இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.
டொமினிக் தீம் அரையிறுதியில் தென்னாபிரிக்க வீரர் கெவின் எண்டர்சனை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>