Instagram போஸ்ட்களை ஒரே நேரத்தில் மொத்தமாக நீக்குவது எப்படி? இதோ வழிகாட்டி

0
192

நவீன டிஜிட்டல் யுகத்தில் மக்களின் பொழுதுபோக்குகளின் மூலமாக இன்ஸ்டாகிராம் செயலிகள் மாறிவிட்டன. அவற்றை பயன்படுத்தாமல் பலரால் இருக்கவே முடியாது என்ற நிலையும் உருவாகியிருக்கிறது. சிலர் இன்ஸ்டாகிராம் செயலியை வருவாய் ஆதரமாகவும் கொண்டிருப்பதால் தினமும் பல்வேறு போஸ்டகளை தொடர்ச்சியாக பதிவிடுகின்றனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் போஸ்டுகளை ஒரேநேரத்தில் நீக்க முடியுமா? முடியாதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதற்கான பதில் நிச்சயம் முடியும்.

ஒரேநேரத்தில் இன்ஸ்டாகிராமில் இருக்கும் அத்தனை பதிவுகளையும் உங்களால் நீக்க முடியும். அதேநேரத்தில் உங்களுக்கு தேவையில்லாத போஸ்ட்களை Archive-ல் சேமித்துக் கொள்ளவும் முடியும். தேவையான நேரங்களில் அந்த போஸ்ட்களை எடுத்துக் கொள்ளலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நிரந்தரமாக நீக்கப்பட்ட பதிவுகளை மட்டும் உங்களால் திரும்ப எடுக்க முடியாது.

பல Instagram போஸ்டுகளை மொத்தமாக நீக்குவது எப்படி?

  1. உங்கள் மொபைலில் Instagram செயலியை ஓபன் செய்யவும்.
  2. ஸ்கிரீனின் கீழ் வலது மூலையில் உள்ள ஐகானைத் கிளிக் செய்து உங்களின் புரொபைல் பக்கத்திற்கு செல்லவும்.
  3. இப்போது மெனுவை பார்க்க மேல் வலது மூலையில் உள்ள மூன்று வரிகளைத் கிளிக் செய்யவும்.
  4. மெனு விருப்பங்களிலிருந்து “Your Activity” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. “Images and Videos” என்று பெயரிடப்பட்ட இரண்டாவது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. உங்கள் எல்லா Instagram Post -களையும் பார்க்க “Posts” என்பதைத் கிளிக் செய்யவும்.
  7. குறிப்பிட்ட போஸ்டுகளை கண்டறிவதில் வசதிக்காக “Sort & filter” விருப்பத்தைப் பயன்படுத்தவும்.
  8. மேல் வலது மூலையில் உள்ள “Select” என்பதைக் கிளிக் செய்யவும்.
  9. நீங்கள் நீக்க அல்லது காப்பகப்படுத்த விரும்பும் போஸ்டுகளைத் தேர்வு செய்யவும்.
  10. தேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் Archive அல்லது நீக்கு விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.