ஜனவரி மாதத்தில் மட்டும் 67 லட்சம் வாட்ஸ்அப் அக்கவுண்ட்ஸ்களை தடை செய்த மெட்டா..!

0
218

மெட்டாவிற்கு சொந்தமான மிகவும் பிரபலமான வாட்ஸ்அப் ஜனவரி மாதத்தில் மட்டும் 67 லட்ச தவறான அக்கவுண்ட்ஸ்களை தடை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அக்கவுண்டுகள் புதிய வாட்ஸ்அப் விதிகள் 2021 இன் படி, கீழ்ப்படியாத காரணத்தினால் தடை செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 1 முதல் 31ஆம் தேதி வரை வாட்ஸ்அப் நிறுவனம் 67,28,000 அக்கவுண்டுகளை தடை செய்துள்ளது. இவற்றில் 13,58,000 அக்கவுண்டுகள் யூசர்களிடமிருந்து எந்த ஒரு புகார் எழுவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கையாக தடை செய்யப்பட்டுள்ளன என்பதை வாட்ஸ்அப் தனது மாத அறிக்கையின் மூலமாக தெரிவித்துள்ளது.

பில்லியன் யூசர்களை கொண்ட மிகவும் பிரபலமான மெசேஜிங் பிளாட்ஃபார்மான வாட்ஸ்அப் ஜனவரி மாதத்தில் மட்டும் 14,828 புகார் அறிக்கைகளை பெற்றுள்ளது. இவற்றில் நடவடிக்கை எடுக்கப்பட்ட புகார்கள் 10.

நடவடிக்கை எடுக்கப்பட்ட அக்கவுண்டுகள் என்பது புகார் அறிக்கையின் அடிப்படையில் வாட்ஸ்அப் உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் நடவடிக்கை என்பது ஒரு அக்கவுண்ட்டை தடை செய்வதாக இருக்கலாம் அல்லது ஏற்கனவே தடை செய்யப்பட்ட ஒரு அக்கவுண்ட்டை தடை நீக்கம் செய்திருக்கலாம்.

“இந்த யூசர் பாதுகாப்பு அறிக்கையில் யூசர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள் மற்றும் அது சம்பந்தமாக வாட்ஸ்அப் எடுத்த நடவடிக்கைகள் அடங்கும். அது மட்டுமல்லாமல் வாட்ஸ் அப் தளத்தை தவறாக பயன்படுத்துவதில் இருந்து தடுப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது“ என்று நிறுவனம் கூறுகிறது.

பில்லியன் கணக்கான சோஷியல் மீடியா யூஸர்கள் பயனடையும் வகையில் வாட்ஸ்அப்பில் வரும் கன்டென்டுகள் மற்றும் பிற பிரச்னைகள் சம்பந்தமாக புகார் அளிப்பதற்கு வாட்ஸ்அப் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது.

உலகில் உள்ள பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தி டிஜிட்டல் சம்பந்தப்பட்ட விதிகளை வலுப்படுத்துவதற்காகவே இந்த புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம்களை பயன்படுத்தும் யூசர்கள் எழுப்பக்கூடிய புகார்களை விசாரித்து அது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கு இந்த அமைப்பு உதவுகிறது.

“நாங்கள் என்டு டு என்டு என்கிரிப்ட் செய்யப்பட்ட மெசேஜ் சேவைகளை வழங்கி வருகிறோம். வாட்ஸ்அப் பிளாட்ஃபார்மில் எந்தவிதமான தவறான பயன்பாடுகளை தவிர்ப்பதன் பொருட்டு எதிர்த்து போராடி வருகிறோம். எங்களுடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அம்சங்கள் மற்றும் கட்டுப்பாடு கருவிகளைத் தவிர, நாங்கள் பொறியாளர்கள், தரவு விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சட்ட அமலாக்க, ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவற்றில் நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவை இந்த முயற்சிகளை மேற்பார்வையிடுவதற்காகவே நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்” என்று வாட்ஸ்அப் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 69 லட்சம் தவறான வாட்ஸ்அப் அக்கவுண்டுகள் தடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.