WhatsApp: பழைய செய்திகளை தேதி வாரியாக தேடும் புதிய அம்சம் அறிமுகம்

0
211

வாட்ஸ்அப் செயலியில் பழைய செய்திகளை தேதி வாரியாக தேடும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி தேதி அடிப்படையில் பழைய மெசேஜ்களை ஈஸியாக கண்டுபிடிக்கலாம்.

வாட்ஸ்அப்பில் பழைய செய்திகளைத் தேடுவதை மெட்டா இப்போது மிகவும் எளிதாக்கியுள்ளது. லேட்டஸ்ட் அப்டேட் மூலம், யூசர்கள் தேதியை கொடுத்து WhatsApp -ல் குறிப்பிட்ட செய்தி அல்லது மீடியாவைத் தேடலாம். உங்களுடைய சாட்டிங்கில் பழைய மெசேஜ்களை தேடுவதற்கு ஸ்க்ரோலிங் செய்யாமல் ஒரு குறிப்பிட்ட தேதியை மட்டும் தேர்வு செய்து, தேவையான செய்தியை தேடிக் கொள்ளும் வகையில் புதிய அப்டேட் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அப்டேட் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதே அம்சம் WhatsApp இணைய பயனர்களுக்கும், அதாவது PC அல்லது Mac -ல் WhatsApp ஐப் பயன்படுத்துபவர்களுக்கும் கிடைக்கிறது. மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது வாட்ஸ்அப் சேனல் மூலம் அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட தேதியில் இருக்கும் WhatsApp செய்தியைத் தேடுவது எப்படி?

குறிப்பிட்ட தேதியிலிருந்து WhatsApp செய்தியைத் தேட, சாட்டிங் அல்லது குழுவிற்குச் சென்று search என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஆண்ட்ராய்டு ஃபோன்களில், மேல் வலது மூலையில் ஒரு காலெண்டர் ஐகானைக் காண்பீர்கள். ஐபோனில் கீழ் வலது மூலையில் இந்த காலண்டர் ஐகான் இருக்கும். இந்த காலண்டர் ஐகானைக் கிளிக் செய்து, தேதியைத் தேர்ந்தெடுக்கவும், குறிப்பிட்ட தேதியிலிருந்து வரும் செய்திகளுக்கு WhatsApp தானாகவே உங்களை அழைத்துச் செல்லும். குறிப்பாக பல ஆண்டுகளாக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு, பழைய மெசேஜ்களை வாட்ஸ்அப்பில் எளிதாகப் பார்க்க இது உதவுகிறது. வாட்ஸ்அப் யூசர்களும் இந்த அம்சத்தால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மெட்டா நிறுவனத்திடம் பல ஆண்டுகளாக பழைய மெசேஜ்களை தேடுவது சிரமமாக இருப்பதை வாடிக்கையாளர்கள் தெரிவித்து வந்தனர். குறிப்பிட்ட மெசேஜை உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில் அப்டேட்டை கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை பரிசீலித்த மெட்டா நிறுவனம் இதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தது. இந்த அப்டேட் விரைவில் வர இருக்கிறது என செய்திகள் வெளியான நிலையில், மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் அதிகாரப்பூர்வமாக பழைய மெசேஜ்களை உடனடியாக தேடும் அம்சத்தை நடைமுறைக்கு வந்திருப்பதை அறிவித்துள்ளார்.