தனது கட்சிக்கான செயலியை வீடியோவில் தோன்றி அறிமுகம் செய்த விஜய்..!(video)

0
179

நடிகர் விஜய் தனது கட்சியில் உறுப்பினராக சேர செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

அத்துடன் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க அவர் அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டது. அதற்காக செயலி ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், 2 கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கு என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடியோ ஒன்றில் தோன்றி, தனது கட்சிக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளார். 

அத்துடன் முதல் நபராக நான் உறுப்பினராகி விட்டேன். விருப்பமுள்ளவர்கள் செயலியை பதிவிறக்கம் செய்து, எங்கள் உறுதிமொழி பிடித்திருந்தால் இணையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக கட்சி தொடர்பில் விஜய் வீடியோவில் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.