திரைப்பட வசனங்களை திருடி தனது உரையை நிகழ்த்தினாரா ராதிகா ஆனந்த்..!

0
98

உலகமே வியக்கும்படி பிரம்மாண்டமாக நடந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் ராதிகா மெர்ச்சண்ட் திரைப்பட வசனங்களை திருடி தனது உரையை நிகழ்த்தியதாக ட்ரோல் செய்யப்பட்டுவருகிறார்.

ஆசியாவின் பணக்கார தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு சமீபத்தில் மிகவும் கோலாகலமாக நடந்தது அனைவரும் அறிந்ததே.

பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், ஹாலிவுட் நடிகர்கள், மார்க் ஜூக்கர்பெர்க், பில்கேட்ஸ் உள்ளிட்ட உலக பணக்கார தொழிலதிபர்கள், திருமணத்திற்கு முந்தைய இந்த நிகழ்வில் அம்பானி குடும்ப நிகழ்வின் பிரம்மாண்டத்தை கண்டுகளித்தனர்.

இந்த ஆடம்பரமான திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில், அம்பானியின் மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் விருந்தினர்கள் முன் உரை நிகழ்த்தினார். இந்த பேச்சு வெகுவாக பாராட்டப்பட்டது.

ஆனால் இந்த பேச்சு ஒரு ஹாலிவுட் படத்தின் டயலாக் என்றும், காப்பி அடிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் இந்த குற்றச்சாட்டை விமர்சகர்கள் ஆதாரத்துடன் காட்டியுள்ளனர்.

இது Social Media யுகம், சில நிகழ்வுகளை மறந்து விடுகிறோம், ஆனால் இணையம் மறப்பதில்லை, இணையம் நம்மையும் மறக்க விடாது, அதே போல், நாம் எதை நகலெடுத்தாலும், அதை நொடியில் உலகுக்குக் காட்டிவிடும்.

இந்த இணையமும், அதிலுள்ள மக்களும் புத்திசாலிகள், அவர்கள் இதையெல்லாம் கூடிய விரைவில் கண்டுபிடிப்பார்கள்.

அதேபோல், அம்பானியின் மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் தனது பேச்சை காப்பியடித்ததாக இணையவாசி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

2004-ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான Shall We Danceயில் இடம்பெற்ற வசனங்களுக்கும், மேடையில் ராதிகாவின் பேச்சுக்கும் உள்ள ஒற்றுமையை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இப்படத்தில் ராதிகாவின் பேச்சையும், நடிகை Susan Sarandon-ன் பேச்சையும் இணைத்து இணையவாசியான சாதிக் சலீம் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், தன்னை அழைத்திருந்தால்கூட நன்றாக சில வார்த்தைகளை எழுதி கொடுத்திருப்பேன், அதனால் சில கொடிகள் தனக்கு கிடைத்திருக்கும் என அந்த நபர் பதிவிட்டு எழுதியுள்ளார்.

ராதிகாவுக்கு ஆதரவு

சாதிக்கின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் ராதிகாவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்தனர்.

காரணமே இல்லாமல் ஏன் வெறுக்கிறீர்கள், ஒரு வேளை அது அவளுக்குப் பிடித்த படமாகவும், அவளுக்குப் பிடித்த டயலாக் ஆகவும் இருக்கலாம், என்று சிலர் கருத்து தெரிவித்தார்.

படத்தில் இருந்து நேரடியாக வசனத்தை தேர்வு செய்திருந்தால் என்ன தவறு என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் இன்னும் சிலர் ராதிகாவை ட்ரோல் செய்து, படைப்பாற்றல், புத்திசாலித்தனம் போன்ற சில விஷயங்களை காசு கொடுத்து வாங்க முடியாது என்று கருத்து தெரிவித்தனர்.