உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து விளக்கமளிக்கப்பட உள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த விளக்கம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணத்துங்க இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த விசாரணைகள் குறித்த விளக்கமளிப்பு நிகழ்வில் உயர் பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்திற்கு முன்னர் விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட உள்ளது.