நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கும், விசாகன் என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்தத் தம்பதிக்கு 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் சூட்டினர்.

இந்நிலையில் விசாகன் குடும்பத்தின் குல தெய்வக் கோயிலான கோவை சூலூர் பகுதியில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், லதா மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். இதை முன்னிட்டு கோயில் வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து ஓர் நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.
