நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்தவர்கள் உணவகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் சுப்பர் மார்க்கெட்களில் பணிபுரிவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், கோவிட் வைரஸ் தொற்றுக்குப் பின்னர் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தமது தொழிலுக்கு ஏற்ற வேலைகளை தேடிக் கொள்ள முடியாமல், இவ்வாறான நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
வைத்திய நிபுணர்கள்
எனினும், பல மருத்துவ வல்லுநர்கள் வெளிநாடுகளில் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிரித்தானியாவில் மற்றும் அவுஸ்திரேலியாவில் விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் பொது வைத்திய நிபுணர்கள் உட்பட பெருமளவிலான வைத்திய நிபுணர்கள் பணிபுரிவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.