எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட கடற்கரையோர பகுதிகளில் எஞ்சிய பணிகள் முன்னெடுப்பு

0
342
TAMIL NEWS Follow activities commenced oil spilled coastal line

(TAMIL NEWS Follow activities commenced oil spilled coastal line)

முத்துராஜவலை எண்ணெய் சுத்திகரிப்பு தொகுதியிலிருந்து கசிந்த எண்ணெய்யை அகற்றும் முயற்சிகளைத் தொடர்ந்து, டிக்கோவிட்டவிலிருந்து உஸ்வெட்டகெய்யாவை கடலோரப் பகுதிகளில் தொடர்ந்தும் எஞ்சிய பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையின் தகவலின் படி, தொடர் நடவடிக்கைகளுக்காக மூன்று சிறிய ராணுவ குழுக்கள் பணியாற்றி வருகின்றனர்.

முத்துராஜவலை எரிபொருள் சுத்திகரிப்பு தொகுதிக்கு மசகு எண்ணெய்யை கொண்டு செல்லும் பாரிய குழாயில் கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட கசிவு காரணமாக கடற்பரப்பில் எண்ணெய் கசிந்துள்ளது.

பின்னர் கசிவு ஏற்பட்ட பகுதியை மீளமைப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.  இருப்பினும், கசிந்த எண்ணெய் கடலில் கலந்து, தீக்கோவிட்ட மற்றும் உஸ்வெட்டகெய்யாவ கடலோரப் பகுதிக்கும் பரவியது.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் கசிந்த எண்ணெ படை நீக்கப்பட்டு வருகின்றது.

(TAMIL NEWS Follow activities commenced oil spilled coastal line)

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites