திருகோணமலையில் 3.8 ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம்!

0
392
Earthquake Trincomalee 3.8 Richter scale

திருகோணமலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படுமா என்பது தொடர்பில் அவதானத்துடன் உள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. Earthquake Trincomalee 3.8 Richter scale

இன்று அதிகாலை இடம்பெற்ற நிலநடுக்கம் பல்லகெலே , மஹகனதராவ மற்றும் ஹம்மன நிலநடுக்கப் பதிவு ரிக்டர் அளவுகோளில் 3.5 மற்றும் 3.8 ஆக பதிவாகியிருந்தது.

திருகோணமலை – மூதூர் மற்றும் கிண்ணியா பிரதேசவாசிகள் இந்த நில அதிர்வை உணர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் , நேற்று நள்ளிரவு 12.35 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட குறித்த சந்தர்ப்பத்தில் , இந்து சமுத்திரத்தின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்டிய பகுதிகளில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லையென புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

tags :- Earthquake Trincomalee 3.8 Richter scale

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites