முந்தல் குழுக்களுக்கு இடையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!

0
452

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கள எலிய பகுதியில் இன்று அதிகாலை இரண்டு குழுக்களுக்கிடையிலான துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Puttalam Munthal Hang Gun Shot 1 Person Spot Dead Tamil News

இவ்வாறு துப்பாக்கி சூட்டிற்க்கு இலக்காகி உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் எனவும் இந்த சம்பவத்தை மேற்கொண்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் 50 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சந்தேக நபரை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து துப்பாக்கியொன்றை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்த முந்தல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை