இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்

0
1263
30 AIDS blood donors Shocking information

2017 ஆம் ஆண்டில் 4 இலட்சத்து 27 ஆயிரத்து 63 இரத்த நன்கொடையாளர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்தபோது எச்.ஐ.வி வைரஸ் (எயிட்ஸ்) அடங்கிய இரத்த மாதிரிகள் 30 கண்டுபிடிக்கப்பட்டதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. (30 AIDS blood donors Shocking information)

மேலும் 3 இலட்சத்து 38 ஆயிரத்து 363 கர்ப்பிணி தாய்மார்களின் இரத்த மாதிரிகளில் எச்.ஐ.வி வைரஸ் அடங்கிய 15 இரத்த மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட ஒரு இலட்சத்து 91 ஆயிரத்து 984 இரத்த மாதிரிகளில் எச்.ஐ.வி வைரஸ் அடங்கிய 52 இரத்த மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நாடு பூராகவும் நடத்தப்பட்ட பாலியல் நோய் தொடர்பான சிகிச்சை நிலையங்களில் கிடைக்கப்பெற்ற ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 897 இரத்த மாதிரிகளில் எச்.ஐ.வி வைரஸ் அடங்கிய 170 இரத்த மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறையில் அடைக்கப்பட்ட 13 ஆயிரத்து 38 கைதிகளின் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்தபோது 05 மாதிரிகளில் எச்.ஐ.வி வைரஸ் (எயிட்ஸ்) தொற்றுநோய் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

7 ஆயிரத்து 996 காச நோயாளிகளின் இரத்த மாதிரிகளில் 09 எச்.ஐ.வி வைரஸ் (எயிட்ஸ்) தொற்றுநோய் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி வைரஸ் (எயிட்ஸ்) தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு இலட்சத்து 171 ஆயிரத்து 596 இரத்த சோதனைகள் நடத்தப்பட்டன.இவற்றில் 285 இரத்த மாதிரிகளில் எச்.ஐ.வி வைரஸ் அடங்கியுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் தேசிய பாலியல் நோய் தடுப்பு மையங்கள் 33 நடத்தப்பட்டு வருவதாகவும் பாலியல் நோய்கள் தொடர்பாக ஏற்படும் எந்த பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காக அவசர தொலைபேசி அழைப்பு நடைமுறையில் உள்ளதாகவும் இந்தப் பிரிவின் பிரதி இயக்குநர் வைத்திய நிபுணர் லீலானி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 30 AIDS blood donors Shocking information