ஆவா குழுவுக்கு பின்னால் முதலமைச்சர் விக்கி – உதய கமன்பிலவுக்கு வந்த வியக்க வைக்கும் சந்தேகம்!

0
652
North Chief Minister Vigneswaran Behind Ava Violence Group

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யி­னர் கொழும்­பில் நேற்­று­முன்­தி­னம் வியா­ழக்­கி­ழமை போராட்­டம் நடத்­தி­னர். North Chief Minister Vigneswaran Behind Ava Violence Group Tamil News

இதில் பங்­கேற்ற தூய ஹெல உறு­ம­ய­வின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உதய கமன்­பில, இலங்­கை­யில் இடம்­பெ­றும் அனைத்­துக் குற்­றச்­செ­யல்க­ளின் பின்­ன­ணி­யி­லும் வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் செயற்­ப­டு­கி­றாரா என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அவர் தனது உரையில் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தன்­னி­டம் பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கி­னால் இரண்டு வாரங்­க­ளில் வடக்­கில் செயற்­ப­டும் ஆவா குழுவை ஒழித்­துக் காட்­டு­வேன் என்று விக்­னேஸ்­வ­ரன் கூறு­கின்­றார். இரண்டு வாரங்­க­ளில் குற்­றச் செயல்­களை குறைத்­துக் காட்ட முடி­யு­மென அவர் கூறி­ய­தால், தற்­போது நாட்­டில் நடக்­கும் அனைத்து குற்­றங்­க­ளுக்­குப் பின்­னா­லும் விக்­னேஸ்­வ­ரன் இருப்­ப­தா­கவே எண்­ணத் தோன்­று­கின்­றது.

மகிந்த ஆட்­சி­யில் மாகாண சபை­க­ளுக்­குப் பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கா­ம­லேயே அனைத்­துக் குற்­றங்­க­ளை­யும் எம்­மால் கட்­டுப்­ப­டுத்த முடிந்­தது. இன்று நிலமை வேறு வித­மா­கக் காணப்­ப­டு­கின்­றது. இதற்­காக விக்­னேஸ்­வ­ர­னுக்­குப் பொலிஸ் அதி­கா­ரத்தை வழங்க முடி­யாது.

இந்த அரசை வீட்­டுக்கு அனுப்­பு­வ­தன் மூலமே இவற்றை தடுத்து நிறுத்த முடி­யும் என அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites