பஸ் இருந்து இறங்கிய பெண் அதே பஸ்ஸில் மோதி பலி : கம்பளையில் சம்பவம்

0
845
woman dead private bus accident gampola

கம்பளை – தொலஸ்ஹாகே வீதியில் வலேகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.(woman dead private bus accident gampola ,Tamilnews, Srilanka Tamilnews)

குறித்த பெண், தனியார் பஸ் ஒன்றில் மோதுண்டே உயிரிழந்துள்ளார்.
பஸ் தரிப்பிடத்தில் பஸ் நிறுத்தப்பட்ட பின்னர் அதிலிருந்து கீழே இறங்கிய பெண் பஸ்ஸின் முன்னாள் வீதியை மாறுவதற்கு முற்பட்டுள்ளார்.

இதன்போது பஸ் முன்னோக்கி நகர்ந்த போது பஸ்ஸில் மோதுண்டுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த பெண், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் கடுகல ஜனபதய – வெட்கேதெனிய பிரதேசத்தை சேர்ந்த 56 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:woman dead private bus accident gampola ,woman dead private bus accident gampola ,