உலகின் சிறந்த கால்பந்து வீரரை தெரிவு செய்வதற்கான முதல் கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில் எம்பாப்பே மற்றும் கீரிஸ்மனுக்கு இடம் கிடைத்துள்ளது. France world’s top 10 football players
21 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டி ரஷ்யாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பிரான்ஸ் அணி 2-வது முறையாக உலக கிண்ணத்தை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்க உள்ளது.
இதற்கான முதல் கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 10 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். உலக கிண்ணத்தை வென்ற பிரான்ஸிலிருந்து 3 வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றனர்.
பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான எம்பாப்பே, கீரிஸ்மன் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. இருவரும் இந்த உலக கிண்ணத்தில் தலா 4 கோல்கள் அடித்துள்ளனர். இதேபோல பிரான்ஸ் நாட்டின் பின்கள வீரரான ரபெல் வரனேயும் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
உலக கிண்ணத்தில் 6 கோல்களை அடித்து விருது பெற்ற இங்கிலாந்து தலைவர் ஹாரிகேனும் இடம்பெற்றுள்ளார். லியோனல் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருடன் இவர்கள் அந்த பட்டியலில் உள்ளனர். பிரேசிலை சேர்ந்த நெய்மருக்கு இடமில்லை.
உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 வீரர்கள் விவரம் கிழே வருமாறு:-
கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்த்துக்கல்), லியோனல் மெஸ்சி (ஆர்ஜன்டினா), எம்பாப்பே, கிரீஸ்மன், ரபெல் வரெ (பிரான்ஸ்), ஈடன் ஹசாட், கெவின் டிபுருயன் (பெல்ஜியம்), ஹாரிகேன் (இங்கிலாந்து) மோட்ரிச் (குரோஷியா), முகமது சாலா (எகிப்து).
tags :- France world’s top 10 football players
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸ் ரயிலில் நிறைமாத கர்ப்பிணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- பிரான்ஸில், காவற்துறை அதிகாரி சேவைத்துப்பாக்கியை மறந்ததால் நடந்த துயர சம்பவம்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.