மஹியங்கனையில் மரத்தை வெட்டியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
7951
Mahiyanganaya Temple Tree Amazing Snake Found

மஹியங்கனை பிரதேசத்தில் ரஜமஹா விகாரைக்கான அபிவிருத்தி திட்டம் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக அங்கிருந்த பாரிய மரம் ஒன்று வெட்டி அகற்றப்பட்டுள்ளது. Mahiyanganaya Temple Tree Amazing Snake Found

இந்நிலையில் அந்த மரத்தினுள்ளே ஒரு அதிசயமான மிகப்பெரிய பாம்பு ஒன்று 28 முட்டைகளை அடைகாத்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து அந்த பாம்பு மற்றும் முட்டைகளை கிராதுருகோட்டையில் அமைந்துள்ள வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளிடம் அறிவித்து, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மரத்தை வெட்டி கீழே சாய்த்த போது மரம் ஆடியமையினால் பாம்பு பதற்றமடைந்து மரத்திற்கு வெளியே வந்துள்ளது. அதனை அவதானித்த மரம் வெட்டும் நபர் மஹியங்கனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அங்கு வந்த பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள் தாய் மற்றும் முட்டைகளை பாதுகாப்பாக எடுத்துள்ளனர். அவ்வாறு மீட்கப்பட்ட பாம்பு சுமார் 12 அடி நீளமானதென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அதிசய பாம்பை பலரும் கண்டு களித்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites