நொடிக்கு 100 ஜிகாபைட்ஸ் வேகம் கொண்ட 6G: ஜப்பானில் அறிமுகம்

0
113

தொழில்நுட்பத்தில் புதுப்புது விடயங்களை அறிமுகப்படுத்துவதில் ஜப்பான் என்றுமே முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் இயங்கிவரும் டெலிகொம் நிறுவனங்கள் அனைத்தினதும் கூட்டு முயற்சியில் உலகின் முதல் 6ஜி சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த மாதம் இந்த சாதனத்தை சோதனை செய்து பார்த்ததில் அதில் வெற்றியும் கிடைத்துள்ளது. அதன் மூலம் நொடிக்கு 100 ஜிகாபைட்ஸ் வேகத்தில் இந்த சாதனம் இயங்கியுள்ளது.

இந்த சாதனம் தற்போதுள்ள 5ஜியின் வேகத்தைக் காட்டிலும் 20 மடங்கு அதிகமாக இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 6ஜியினால் ஹலோக்ராபிக் கம்யூனிகேஷன், அதிவேகமான விரிச்சுவல் ரியாலிட்டி அனுபவங்கள் கிடைக்கிறது.