பிறந்து 15 நாட்களேயான குழந்தையை விற்பனை செய்த நால்வரின் நிலை…..!

0
401
illegal baby sale ragama teaching hospital four arrest latest tamil news

சட்டவிரோதமான முறையில் சிசுவொன்றை விற்பனை செய்ய முயற்சித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். illegal baby sale ragama teaching hospital four arrest latest tamil news

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்து 15 நாட்களேயான சிசுவொன்றை விற்பனை செய்ய முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிசுவின் தாய் , பாட்டி , தாத்தா மற்றும் பெண் தரகர் ஆகியோரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ராகமை மருத்துவமனைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குழந்தை 10 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவிருந்தாக காவற்துறை மேற்கொண்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

காவற்துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நான்கு பேரும் மஸ்கெலியா மற்றும் ராகமை பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

அவர்கள் இன்றைய தினம் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
illegal baby sale ragama teaching hospital four arrest latest tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites