சுவிஸை 1-0 என வென்றது ஸ்வீடன்! ஒரு வழியாக காலிறுதிக்கு நுழைந்தது

0
203
football sweden meet switzerland knock match fifa world cup

(football sweden meet switzerland knock match fifa world cup)

50 வது ஆட்டமாக இடம்பெற்ற இன்றைய கால்பந்து உலகக் கோப்பையில் மிகவும் போரடிக்க வைத்த ஆட்டமாக ஸ்வீடன், சுவிட்சர்லாந்து ஆட்டம் அமைந்தது.

உலகக் கோப்பையில் தனது 50 வது ஆட்டத்தில் ஸ்வீடன் மந்தமாக விளையாடினால், சுவிட்சர்லாந்து அதைவிட மோசமாக விளையாடியது.

ஆட்டத்தின் குறிப்பிடும்படியான ஒரே விஷயம் 66 வது நிமிடத்தில் அடிக்கப்பட்ட கோல் மட்டுமே. அதன் மூலம் 1-0 என ஸ்வீடன் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன.

நாக்அவுட் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும். ரஷ்யா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், குரேஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகின்றன.

அர்ஜென்டினாவை வென்று பிரான்ஸ், போர்ச்சுகலை வென்று உருகுவே, ஸ்பெயினை வென்று ரஷ்யா, டென்மார்க்கை வென்று குரேஷியா, மெக்சிகோவை வென்று பிரேசில், ஜப்பானை வென்று பெல்ஜியம் ஆகியவை காலிறுதிக்கு நுழைந்துள்ளன.

இந்த உலகக் கோப்பையில் எப் பிரிவில் இடம்பெற்றிருந்த ஸ்வீடன் 3 க்கு 2 ல் வெற்றி, ஒரு தோல்வியை பெற்றது.

தென்கொரியாவை 1-0, மெக்சிகோவை 3-0 என வென்றது. நடப்பு சாம்பியன் ஜெர்மனியிடம் 2-1 என தோல்வியடைந்தது. அதே நேரத்தில் இ பிரிவில் இடம்பெற்றிருந்த சுவிட்சர்லாந்து 3 ல் ஒரு வெற்றி, 2 சமநிலையுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

முதல் ஆட்டத்தில் பிரேசிலுடன் 1-1 என சமநிலை செய்து அசத்தியது. செர்பியாவை 2-1 என வென்றது.

கோஸ்டாரிகாவுடன் 2-2 என அசத்தலாக சமநிலை செய்தது. ஸ்வீடன் அசத்தல் சாதனை இன்று நடைபெற்ற ஆட்டம், உலகக் கோப்பையில் ஸ்வீடனுக்கு 50 வது ஆட்டமாகும்.

50 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள 11 வது அணியாக உள்ளது.

இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளில் மெக்சிகோ மட்டுமே அதிகப் போட்டிகளில் விளையாடியுள்ளது.

1958 ல் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஸ்வீடன், 1994 ல் மட்டுமே நாக் அவுட் சுற்றை தாண்டியுள்ளது.

கடைசியாக விளையாடிய நான்கு உலகக் கோப்பைகளிலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தகவல் மூலம் – தமிழ்மைகேல்

(football sweden meet switzerland knock match fifa world cup)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :