இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
206
Today Horoscope 27-06-2018

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 13ம் தேதி, ஷவ்வால் 12ம் தேதி,
27.6.18 புதன்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி காலை 9:23 வரை;
அதன் பின் பவுர்ணமி திதி, கேட்டை நட்சத்திரம் காலை 11:01 வரை;
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
பொது : பவுர்ணமி, காலை 9:24 மணி முதல் கிரிவலம், மலைக்கோவில் வழிபாடு.

மேஷம்:

நற்பெயரை காப்பதில் கூடுதல் கவனம் கொள்வீர்கள். குடும்பத்தினர் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும். லாபம் சுமார். பெண்கள் பயன்தராத பொருட்களை வாங்க வேண்டாம்.

 

ரிஷபம்:

வெகுநாள் குழப்பம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும். ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்க பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர் குழந்தைகளின் நற்செயல் பெருமையை தேடித் தரும்.

மிதுனம்:

குடும்பத்தினர் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். உடல் ஆரோக்கியத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம். நண்பரால் உதவி உண்டு.

கடகம்:

பணிகளை கூடுதல் ஆர்வமுடன் செய்வீர்கள். சகோதர வழியில் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும்.

சிம்மம்:

புதிய வாய்ப்பால் தகுதியை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். பணவரவு அதிகரிக்கும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

கன்னி:

திறமையை வெளிப்படுத்தி நற்பெயர் பெறுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். வருமானம் மிதமாக கிடைக்கும். உறவினர் வகையில் திடீர் செலவு ஏற்படலாம். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

துலாம்:

நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சீரான முன்னேற்றம் பெறும். சேமிக்கும் விதத்தி்ல் லாபம் கிடைக்கும். சீரான ஓய்வு ஆரோக்கியத்தை பாதுகாக்கும். பெண்கள் கணவரின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்வர்..

விருச்சிகம்:

மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும். உறவினருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். சேமிக்கும் விதத்தில் லாபம் அதிகரிக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு:

லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

மகரம்:

செயல்களில் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். மிதமான லாபம் கிடைக்கும். வீட்டுச்செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.

கும்பம்:

எதிரியால் இடையூறு குறுக்கிடலாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழிவகுக்கும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும்.

மீனம்:

கடந்த கால உழைப்பின் பயனை பெறுவீர்கள். இஷ்ட தெய்வ அருளால் தொழில், வியாபாரம் செழிக்கும். லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்