உச்சகட்ட சோதனைக்கு ஆளாக்கப்பட்ட அவுஸ்திரேலியா!!! : ஏன் தெரியுமா?

0
217
Australia cricket ranking issue news Tamil

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 34 வருடங்களுக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் மிகப்பெரிய சரிசை சந்தித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள அவுஸ்திரேலிய அணி சர்வதேச ஒருநாள் தரப்படுத்தலில் 6வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

1984ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பின்னர், அவுஸ்திரேலிய அணி சர்வதேச ஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இறுதியாக கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கெதிரான தொடரை அவுஸ்திரேலிய அணி 4-1 என கைப்பற்றியிருந்தது. இதற்கு பின்னர் நடைபெற்ற 15 ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி 13 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

இதில் நியூஸிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடர், இந்திய அணிக்கெதிரான தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரை இழந்த அவுஸ்திரேலிய அணி, சம்பியன்ஷ் கிண்ணத்தின் முதல் சுற்றிலேயே வெளியேறியிருந்தது.

தற்போது தரவரிசையில் ஆறாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ள அவுஸ்திரேலிய அணி, மீண்டும் தங்களின் இடத்தை மீட்டெடுப்பதற்கு இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துக்கு முகங்கொடுத்துள்ளது.

<<Tamil News Group websites>>

Australia cricket ranking issue news Tamil,Australia cricket ranking issue news Tamil