பெண்களின் சூதாட்ட நிலையத்திற்கு பொலிஸார் வைத்த ஆப்பு!

0
240
Police Roundup Women casino

மீடியாகொடை பிரதேசத்தில் பெண்களுக்காக மாத்திரம் நடத்தப்பட்டு வந்த சூதாட்ட நிலையத்தை மீடியாகொடை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.(Police Roundup Women casino)

இதேவேளை, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

78 வயதான பெண் ஒருவரினால் நடத்தப்பட்ட இந்த சூதாட்ட நிலையத்தில் சூதாடுவதற்கு 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் சென்றுள்ளனர்.

சூதாட்டத்திற்கு பழகியுள்ள தங்களின் மனைவிகளை அந்த பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காக கணவன்மார்களால் பொலிஸாருக்கு கொடுத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான பெண்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் எதிர்வரும் 21 ஆம் திகதி இவர்களை பணத்துக்காக சூதாடிய குற்றத்திற்காக பலப்பிடிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tags :- Police Roundup Women casino

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites