‘Work from Scooter’: இளம் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரல்

0
41

இந்தியாவின் பெங்களூர் மாநிலத்தில் பெண் ஒருவர் போக்குவரத்து நெரிசலில் அலுவலக ஒன்லைன் ‘டீம்’ மீட்டிங்கில் பங்கேற்றிருந்தமையானது தற்போது வைரலாகியுள்ளது.

குறித்த பெண் பெங்களூருவின் மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட வேளையிலேயே இந்த சுவாரஷ்ய சம்பவம் பதிவாகியுள்ளது.

எக்ஸ் தளத்தில் வெளியான காணொளி

பிரபல மைக்ரொ ப்ளாக்கிங் பயனர் என்று அழைக்கப்படும் ஷான் சுந்தர் தனது எக்ஸ் தளத்தில் குறித்த பெண்ணின் காணொளியை, “வேர்க் ப்ரம் ஸ்கூட்டர்” என கேளியாக பதிவிடவே அது தீயாய் பரவியது.

குறித்த காணொளியில், அந்த பெண் தனது ஸ்கூட்டரில் அமர்ந்து ஸ்மார்ட்போனைப் பிடித்துக்கொண்டு, ஒன்லைன் சந்திப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

மேலும் குறித்த காணொளியூடாக பெங்களூருவின் போக்குவரத்து நிலைமை மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்படுகின்றது.

மடிக்கணினியில் சூம் மீட்டிங்கில் கலந்து கொண்ட நபர்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மற்றொரு வீடியோ இணையத்தில் இதேபோன்று லைவராகியிருந்தது. ஒரு நபர் தனது மடிக்கணினியில் சூம் மீட்டிங்கில் கலந்து கொண்டு பெங்களூருவின் நெரிசலான தெருக்களில் ஸ்கூட்டரில் செல்வதை அந்த காணொளி காட்டியிருந்தது.

அன்றாட வேலைகளை பாதிக்கும் தொழிநுட்பம்

இவ்வாறான கடுமையான சட்ட திட்டங்கள் கொண்ட நிறுவனங்களில் பணிபுரிவதால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பாதிப்புகள் பற்றி தற்போது இணையத்தில் கருத்துகள் பகிரப்படுகின்றது.

Mamaearth இன் இணை நிறுவனர் கஜல் அலக் இந்த காணொளியை பகிர்ந்து அது தொடர்பில் சில யதார்த்தமான விடயங்களை பகிர்ந்திருந்தார்.

அதாவது வேலை – வாழ்க்கை இரண்டிற்குமான சமநிலையின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். மற்றும் வேலையை விட வாழ்க்கையின் முக்கியத்துவத்தை பற்றி விவரிக்கும் ஒரு விரிவான இடுகையையும் அவர் பகிர்ந்திருந்தார். நவீன கலாசாரத்தின் கோரிக்கைகளுடன் போராடும் பலருக்கு இந்த காணொளி பொருத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.