வவுனியாவில் ஒரே குடும்பத்தில் ஏற்படும் சோக நிலை

0
414
tragedy family Vavuniya

இருதய நோயால் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சகோதரியும் சற்றுமுன் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார். (tragedy family Vavuniya)

இந்த இரு சகோதரிகளின் தொடர் உயிரிழப்பானது வவுனியா பிரதேசத்தை மிகவும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.

வவுனியா கரப்பன்காட்டை சேர்ந்த திரு திருமதி ரியோன் தம்பதிகளின் இரு பெண் குழந்தைகளும் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 22.05.2018  அன்று இரு பெண் குழந்தைகளில் ஒருவரான 8 வயதுடைய தன்சிகா என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை மற்றைய பெண் குழந்தையான 7 வயதான சரணிக்கா எனும் சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தில் தொடர்ந்து இடம்பெற்ற சிறார்களின் உயிரிழப்பினால் வவுனியா நகரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் குறித்த சகோதரிகளின் மூத்த சகோதரனும் ஏழு வயதில் இதே நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

tags :- tragedy family Vavuniya

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites