“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்!!!

0
387
Bangladesh captain Shakib al hasan news Tamil

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரின் படுதோல்வி குறித்து பங்களாதேஷ் அணியின் தலைவர் சகிப் அல் ஹசன் கருத்து தெரிவித்துள்ளார்.

முதல் முறை இருபதுக்கு-20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்ட பங்களாதேஷ் அணி, 3-0 என வைட்வொஷ் ஆனாது.

இறுதியாக நேற்று நடைபெற்ற போட்டியிலும் வெற்றியை நோக்கி முன்னேறிய பங்களாதேஷ் அணி, இறுதிக்கட்டத்தில் ஒரு ஓட்டத்தால் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து கருத்து வெளியிட்ட சகிப்,

“நான் பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் மோசமாக செயற்பட்டிருந்தேன். அதனால் பதிலளிப்பதற்கு கொஞ்சம் கடினமாக உள்ளது. இந்த தோல்வியானது ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியிலிருந்து இதுவரை மீள முடியவில்லை. இந்த மூன்று போட்டிகளிலும் எமது திறமைக்கேற்ற துடுப்பாட்டத்தை நாம் வெளிப்படுத்தவில்லை. இறுதியாக இன்று (நேற்று) நடைபெற்ற போட்டியின் வெற்றியின் அருகில் வந்து தோல்வியுற்றது அதிகமான வலியை ஏற்படுத்தியுள்ளது.

எமது ஆட்டத்தின் வெளிப்பாடு இந்த தொடரில் மோசமாக இருந்தது. நாம் பந்து வீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு என அனைத்திலும் மோசமாக செயற்பட்டிருந்தோம். பந்து வீச்சை பொருத்தவரையில், முதல் போட்டியை விட அடுத்த போட்டிகளில் சற்று சிறப்பாக செயற்பட்டிருந்தோம். எனினும் களத்தடுப்பில் நாம் பல தவறுகளை விட்டிருந்தோம் என்பதும் கவனிக்கத்தக்கது” என குறிப்பிட்டார்.

<<Tamil News Group websites>>

Bangladesh captain Shakib al hasan news Tamil, Bangladesh captain Shakib al hasan news Tamil, Bangladesh captain Shakib al hasan news Tamil