(tamilnews north sinhala fisherman forcing staying tamil area)
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை உடனடியாக வெளியேற்றக் கோரி மருதங்கேணி மீனவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முற்பகல் 10.30 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரையில் நடைபெற்றது.
இதன்போது, ‘மீன்பிடி திணைக்களமே மீட்டுதா, எம் வளத்தை’, ‘பிரதேச செயலகமே மீட்டுத் தா.
எம் கடல்வளத்தை, ‘அதிகாரிகளே அத்துமீறிய கடற்றொழிலாளர்களிடம் அசமந்தம் காட்டாதே’ என்பன போன்ற கோஷங்களை எழுப்பியவாறும், பதாகைகளை தாங்கியவாறும் தென்பகுதி மீனவர்கள் அடாத்தாக வாடிகளை அமைத்து தங்கியுள்ள இடத்திலிருந்து
மருதங்கேணி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக வந்து மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
இதன் பின்னர் தென்பகுதி மீனவர்களின் அத்து மீறல்களிடமிருந்து
தமது கடல்வளத்தை பாதுகாக்கும் படியும், தென்பகுதி மீனவர்களால் உருவாகப்போகும் வாழ்வாதார நெருக்கடியிலிருந்து தம்மை பாதுகாக்கும் படியும் கேட்டு மகஜர் ஒன்றிணை மருதங்கேணி பிரதேச செயலருக்கும்,
யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் சேர்த்து மருதங்கேணி பிரதேச செயலரிடம் கையளித்தனர்.
(tamilnews north sinhala fisherman forcing staying tamil area)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சக்கு 5 ஆண்டுகள் சிறை
- கமல்ஹாசன் கூறியதில் தவறில்லை: நடிகர் ரஜினிகாந்த்
- உலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ள அந்த ஹோட்டல்!
- மே.தீவுகள் – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் இன்று!!!
- குழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்ன செய்வது!
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை