சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சக்கு 5 ஆண்டுகள் சிறை

0
385
Supreme Court Sathiyamurti jail property accumulation case

Supreme Court Sathiyamurti jail property accumulation case

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துச் சென்னை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1991 -1996 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் தமிழக வணிக வரித்துறை அமைச்சராக இருந்தவர் சத்தியமூர்த்தி. பதவிக்காலத்தில் இவரும் இவர் மனைவிசந்திராவும் வருமானத்துக்கு அதிகமாக 83லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்புக்குச் சொத்துச் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை 1997ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 2001ஆம் ஆண்டு இருவரையும் விடுதலை செய்தது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார்.

அதில் விசாரணை நீதிமன்றம் சொத்துக்களைச் சரியாக மதிப்பிடவில்லை எனக் குறிப்பிட்டதுடன், இருவரையும் விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்தார். சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் அவர் மனைவிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், இருவருக்கும் தலா 5 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார்.

Supreme Court Sathiyamurti jail property accumulation case

More Tamil News

Tamil News Group websites :