பாபர் அஷாமுக்கு பதிலான ஹரிஸ் சொஹைல்!!! : பாகிஸ்தான் அணிக்குழாம் அறிவிப்பு

0
480
Scotland vs Pakistan T20 squad announced

ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டள்ளது.

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துடன் டி20 தொடரில் விளையாடவுள்ளது.
டி20 தொடர் நிறைவடைந்த உடன் பாகிஸ்தான் அணி, ஸ்கொட்லாந்து சென்று இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் விளையாடவுள்ளது.

பாகிஸ்தான் அணி தங்களது சொந்த மைதானத்தில் இவ்வருட ஆரம்பத்தில், மே.தீவுகளுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் விளையாடியிருந்த அனைத்து வீரர்களும் பெயரிடப்பட்டுள்ளதுடன், உபாதைக்குள்ளாகிய பாபர் அஷாமுக்கு பதிலாக ஹரிஸ் சொஹைல் இணைக்கப்பட்டுள்ளார்.

பாபர் அஷாம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது முழங்கை உபாதைக்கு உள்ளாகி, இங்கிலாந்து அணிக்கெதிரான முழு தொடரிலிருந்து வெளியேறியிருந்தார்.

ஸ்கொட்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டி20 போட்டி ஜுன் 12, 13ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் அணிக்குழாமின் முழு விபரம்

 1. அஹமட் சேஷாட்
 2. பக்ஹர் ஷமான்
 3. ஹரிஸ் சொஹைல்
 4. சொஹிப் மலிக்
 5. அசிப் அலி
 6. சர்ப்ராஷ் அஹமட் (தலைவர்)
 7. ஹுசைன் தலாத்
 8. பஹீம் அஷ்ரப்
 9. முஹமது நவாஷ்
 10. சதாப் கான்
 11. மொஹமட் அமீர்
 12. ஹசன் அலி
 13. ரெஹாட் அலி
 14. உஸ்மான் கான்
 15. சஹீன் அப்ரிடி

<<Tamil News Group websites>>

Scotland vs Pakistan T20 squad announced, Scotland vs Pakistan T20 squad announced