மதிப்புமிக்க நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் பிரான்ஸ்!

0
842
399 French beaches won Pavillon Bleu flags

மதிப்புமிக்க நாடுகளின் வரிசையில் ஐரோப்பிய பட்டியலில் மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. 399 French beaches won Pavillon Bleu flags

186 பிரஞ்சு நகராட்சிகளில் உள்ள மொத்தம் 399 கடற்கரைகளிற்காக பிரான்ஸிற்கு, 2018 ம் ஆண்டிற்கான prestigious Pavillon Bleu flag விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 2017 இல் பிடித்த இடத்தை விட சற்று முன்னிலையில் இடம்பிடித்துள்ளது.

இந்த விருது உயர் கடல் நீரின் தரம் மற்றும் சுத்தமான கடற்கரை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகிறது. இது சுற்றுலாப்பயணத்திற்கு ஒரு வரம் என்று கருதப்படுகிறது.

இந்த விருதுகளில் முதல் இடத்தை 691 கடற்கரைகளை கொண்ட ஸ்பெயின் நாடும், இரண்டாவது இடத்தை 534 கடற்கரைகளை கொண்ட கிரீஸ் நாடும் பிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் இருக்கிறது.

மொத்தம் 18 புதிய பிரஞ்சு நகரங்கள் இந்த ஆண்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் Saint-Palais-sur-Mer (17), Egletons (19), Masseret (19), Carsac de Gurson (24), Saint Estèphe (24), Saint Pol de Léon (29), Montréjeau (31), Le Verdon sur Mer (33), Saint Lunaire (35), Montcuq en Quercy Blanc (46), Agon-Coutainville (50), Gouville sur Mer (50), Gravelines (59), Guiche (64), Saint Pierre d’Albigny (73), Excenevex (74), Laguépie (82) மற்றும் Saint-Hilaire les Places (87) போன்ற நகரங்கள் உள்ளடங்குகின்றன.

Pavillon Bleu ஒரு தன்னார்வ திட்டமாகும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு, இத் திட்ட ஏற்பாட்டுக் குழுவிற்கு விண்ணப்பம் அனுப்பி நகரத்தின் குடிமக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த அனைத்து கடற்கரைகளுக்கும் சென்று அவற்றின் தரங்களை ஆய்வாளர்கள் சோதித்தே விருது வழங்குவார்கள்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**