பினாங்கில் பிரிட்டிஷ் பிரஜையை கொடூரமாக தாக்கிய இருவர் கைது..!

0
710
arrested brutal attack british citizens, arrested brutal attack british, malaysia tamil news, malaysia news, pinang,

{ arrested brutal attack british citizens }

மலேசியா: இங்கு ஜாலான் பினாங்கு என்ற பகுதியில் உள்ள உணவகத்தின் முன்புறம், பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரை தாக்கிய கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் இருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

அச்சம்பவம் தொடர்பில், 38 வயது ஆடவர் ஒருவரை இரு நாட்களுக்கு முன்னர், போலீசார் கைது செய்தனர். அந்தச் சுற்றுலாப் பயணியை கழுத்துப் பகுதியில் தாக்கிய கும்பலைச் சேர்ந்த 30 வயது ஆடவன் ஒருவனை போலீசார் நேற்று கைது செய்தனர் என்று வடக்கு கிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுவார் ஒமார் கூறியுள்ளார்.

“இதுவரை நாங்கள் இருவரை கைது செய்துள்ளோம். மேலும் சிலரை தேடி வருகின்றோம். அதுமட்டுமல்லாது, சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் நண்பர்கள் இருவரையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகாலை 4.10 மணிக்கு, கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்று, அந்த பிரிட்டன் நாட்டவரை, அக்கும்பல் தாக்கியது. அச்சம்பவத்தில், அந்த சுற்றுலாப் பயணி கடுமையான காயங்களுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அந்த 38 வயது ஆடவனை போலீசார் கைது செய்தனர். அவன் வியாழக்கிழமை வரை போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: arrested brutal attack british citizens

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசியரான எவரெஸ்ட் நாயகன் ராமன் நேப்பாளில் சடலமாக மீட்பு..!

*அஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..!

*1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு!

*அமைச்சராக விருப்பம் இல்லை! லிம் கிட் சியாங்

*மூன்றே நாளில் பொருளாதாரம் வலுவாகி விட்டதா?- பக்காத்தானுக்கு நஜிப் கேள்வி

*நஜிப் மீதான விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்! அன்வார் அறிவிப்பு

*மகாதீரைச் சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர்..!

*நஜிப் வீட்டில் 20 ஆண்டு திறக்கப்படாத இரும்புப் பெட்டிக்குள் இருந்தது என்ன?

<<Tamil News Groups Websites>>